மறுவுற்பத்திபிரமானத்தின் படி, இனம் இனத்தைத் தோற்றுவிக்கும்.ஆதி1:11 விதையிலிருந்து ஜீவன் செடிக்கு சென்று பின் கனியில் தோன்றும்.இது இன்றய சபைக்குமாகும். இதினிமித்தம் சபைகள் அதினதின் மூலவித்தை பிரதிபலிக்கும்.இக்கடைசிக்காலத்தில் மெய்மணவாட்டியுடைய -கிறிஸ்துவின் வித்து தலைக்கல்லிடம் நெருங்கி, உன்னதசபையாக சந்ததியாக விளங்கும். மணவாட்டிசபையிலுள்ளோர் இயேசுவோடினைய தேவசாயலடைந்து அவரைப்போலிருப்பார்கள். கிறிஸ்துஇயசுவும் மணவாட்டியும் ஒன்றாயிருப்பர். ஜீவதேவனின் வார்த்தையை வாழ்க்கையில் வெளிப்படுத்துவர். இதர சபைகள் தன் தவறான துவக்கத்தினிமித்தம் இந்நிலையெய்தாது. வார்த்தையுடன் கலந்த மனுஷருடைய கற்பனைகளை தனக்கென உருவாக்கினதால் கலப்பாக காணப்படும். முதல்குமாரன் ஆதாம் தேவன் உரைத்த வார்த்தையின் வித்து. அவன் தன் இன (மற்றோர் தேவகுமாரனை) உற்பத்திசெய்ய ஒரு மணவாட்டியைப் பெற்றான்.ஆனால் அவள் கலப்பினிமித்தம் பாவ வீழ்ச்சியுற்று அவனையும் வீழ்த்தினாள். இரண்டாம் குமாரன் இயேசுவும் தேவன் உரைத்த வார்த்தை. ஆதாமைப்போல் இவருக்கும் ஒரு மணவாட்டி கொடுக்கப் பட்டது. அவளும் சோதனையில் விவாகத்தின் முன்பே வார்த்தையை சந்தேகித்து மரித்தாள்.
மெய் வித்தான வார்த்தையையுடைய ஒரு சிறுக் கூட்டத்திலிருந்து மனுஷருடைய கொள்கை பிரமாணங்களுக்கு விலகிய கன்னிகையை தேவன் இயேசுவுக்கு அன்பான மணவாட்டியாக அளிப்பார்.மணவாட்டி அங்கத்தினர்களான இவர்களாலும்,இவர்கள் மூலமாகவும் தேவன் தம்மை இக்கன்னிகையில் வெளிப்படுத்த தாம் செய்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார்.
Wednesday, April 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment